ஜயம்பதியின் வெற்றிடத்திற்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு

saman
saman

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னபிரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனை அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (22) ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன இராஜினாமா செய்திருந்த நிலையில் அவரின் இடத்திற்கே சமன் ரத்னபிரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.