தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொண்டிருந்த நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்கள் இன்றும் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று (22) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“பௌத்த மதத்தையோ, சிங்கள மக்களையோ நாங்கள் ஆள வேண்டும் என்று எந்த சந்தர்ப்பத்திலும் நாங்கள் நினைக்கவில்லை. அவர்கள் அழிய வேண்டு என்றும் நாங்கள் நினைத்ததில்லை.
எங்களுடைய மக்களைத்தான் நாங்கள் ஆள வேண்டும் என்று போராடுகின்றோம் என்று தமிழ் செல்வன் அண்ணா அவர்கள் அன்றொரு நாள் குறிப்பிட்டிருந்தார்.
அந்த காணொளி தற்போதும் என்னிடம் இருக்கின்றது. நான் இதை ஏன் கூறுகின்றேன் என்றால் இந்த நிலைப்பாட்டில் தான் எங்களுடைய மக்கள் இருக்கின்றார்கள்.
ஆகவே எங்களுடைய மக்களை வஞ்சிப்பதோ அல்லது அடக்க நினைப்பதோ எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கையினுடைய எதிர்கால பொருளாதார கொள்கைக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.