புதிதாக பரவி வரும் கொறொனா வைரஸ் ரஷியாவில் பரவினால் அதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது 6 மாதங்களாவது ஆகும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுவாசக்கோளாறுகள் ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளிலும் இந்த வைரசின் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய கொறொனா வைரஸ் உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்களது நாடுகளில் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், கொறொனா வைரஸ் ரஷியாவில் பரவினால் அதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது 6 மாதங்களாவது ஆகும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.