மாநகரசபையின் இணைப்பு அதிகாரியாக சிங்கள இராணுவ அதிகாரி – ஆளுநருக்கு எதிர்ப்பு

charls
charls

யாழ் மாநகரசபையின் இணைப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற இராணுவ கேணல் அதிகாரியொருவரை வட மாகாண ஆளுநர் நியமிக்கவுள்ளமைக்கு யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வடக்கில் ஓய்வுபெற்ற நிருவாகசேவை அதிகாரிகள் இருக்கும் போது, வடக்கு பிரதேசத்தை அறிந்திராத சிங்களவரான இராணுவ அதிகாரியை மாநகரசபை இணைப்பு அதிகாரியாக நியமித்தது, மாநகரசபையை கட்டுப்படுத்தவா என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

யாழ்.மாநகர சபை நிருவாகத்தின் நடைமுறைகளில் ஒரு சில விடயங்களுக்கு மட்டுமே ஆளுநர்களின் அனுமதிக்காக செல்ல வேண்டியிருந்தது.

எனினும் இந்நியமனமானது எதிர்வரும் காலங்களில் யாழ்.மாநகர சபை முன்னெடுக்கின்ற எல்லா நடவடிக்கைகளுக்கும் ஆளுநரின் அனுமதியை பெற வேண்டும் என்ற நிலையை தோற்றுவிக்கும் என கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் யாழ் மாநகரசபையின் இணைப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற இராணுவ கேணல் அதிகாரி நியமிக்கப்படுவாராயின் அது மிகவும் கண்டனத்திற்குறியது என தமது கண்டனத்தினை தெரிவித்துள்ளனர்.