மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி நியமனம்!

kalamathi0
kalamathi0

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா உத்தியோகபூர்வமாக இன்று (24) தனது நியமனத்தை பெற்றுள்ளார்.

எதிர்வரும் 27ம் நாள் (திங்கள் கிழமை) மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக கடமை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலாமதி பத்மராஜா மண்முனை வடக்கு பிரதேச செயலாளராகவும் பின்பு மாகாணசபையின் உயர் பதவிகளையும் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.