கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க விசேட நடவடிக்கை – சுகாதார அமைச்சர்

0 11
0 11

கொரோனா வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்றைய தினம் (24) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பதிலளிக்கையில்,

“நாட்டுக்கு வரும் விமான பயணிகளுக்கு இந்த நோய் அறிகுறி காணப்படுமாயின் உடனடியாக அது தொடர்பில் அறிவிக்குமாறும் இதற்காக விமான நிலையத்தில் இதற்காக விசேட வைத்திய குழு ஒன்று செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

இதுவரையில் இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட எவரும் அடையாளம் காணப்படவில்லை.

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சீன நாட்டு சிறுவன் தொடர்பான தகவல் பதிவானது. பின்னர் இந்த சிறுவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இது பொதுவான காய்ச்சல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.