வடமேல் மாகாணத்தின் 1400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள்

north west
north west

வடமேல் மாகாணத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்களை வழங்கும் நிழ்வு நேற்று (18.09.2019) குருநாகல் வெலகெதர மைதானத்தில் நடைபெற்றது, இதில் 1400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டன. 100பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கிய ஜனாதிபதி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் பெஷால் ஜெயரத்ன, தயசிறி ஜெயசேகர, சாந்தா பண்டார, வடமேல் மாகாணத்தின் முன்னாள் முதல்வர் தர்மசிறி திசாநாயக்க, திரு.அதுலா விஜேசிங்க மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் உரையாற்றிய ஜனாதிபதி “நாட்டின் கல்வித் துறையில் சுமார் 10 சதவீதமானவர்கள் ஆசிரியர் சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என்பது கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றில் தெரியவந்திருப்பதாகவும், பரீட்சை சான்றிதழ்களை கொண்டிருந்த போதிலும் ஆசிரியர் தொழிலுக்கு தேவையான தரத்தை அவர்கள் கொண்டிருக்காமையே அதற்கு காரணம்” என்றும் குறிப்பிட்டார்.

ஆசிரியர்களின் பணி மாணவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் மட்டுமே நிறைவேற்றப்படுவதில்லை என்றும், பாடசாலையின் போது மாணவர்களின் பொறுப்பு வகுப்பு ஆசிரியர்களிடமும் உள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மாணவர்கள் சமீபத்திய தொழில்நுட்பத்துடன் முன்னேறும் போது வகுப்பறையின் சவால்களை எதிர்கொள்ள ஆசிரியர்களின் அறிவைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.

இதற்கிடையில், வடமேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தின் புதிய அலுவலக வளாகத்திற்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் பெஷால ஜெயரத்ன, குருநாகல் மேயர் துஷாரா சஞ்சீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.