மோடி பயணிக்கும் விமானம் பறக்கத்தடை விதித்தமைக்கு இந்தியா கண்டனம்!

gallerye 021952114 1917080
gallerye 021952114 1917080

பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கும் சிறப்பு விமானம், பாகிஸ்தான் வான்பரப்பின் வழியே பறக்க அனுமதி மறுத்திருப்‌பதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல இருக்கும் விமானம் பாகிஸ்தான் வான்பரப்பின் வழியே செல்ல அனுமதி கோரப்பட்டதற்கு, அனுமதி அளிக்க மாட்டோமென அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

இதற்கு, இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ்குமார் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சுவிட்சர்லாந்து சென்றபோதும் அவரது சிறப்பு விமானத்துக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு, அடுத்தடுத்து இந்திய தலைவர்களின் சிறப்பு விமானங்களுக்கு அனுமதி வழங்கப்படாததற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.