ஐ.தே.க வேட்பாளர் கரு – சுதந்திரக்கட்சி வலியுறுத்தல்!

karu
karu

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கருஜெயசூரியவே என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தித் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் எம்.பி.யுமான தயாசிறி ஜெயசேகரவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பி.யான தினேஷ் குணவர்தன ஆகியேரே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதன்போது அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரோ இந்த நாட்டின் ஜனாதிபதி கரு ஜெயசூரிய என்பதனை ஏறுக்கொண்டுவிட்டார் எனக் கூறினார்.