சஜித் பிரேமதாச வேட்புமனுத்தாக்கல்!

s.premadasa 1
s.premadasa 1

அமைச்சர் சஜித் பிரேமதாசவினது வேட்புமனுத்தாக்கலை எதிர்வரும் ஒக்டோபர் 05ம் திகதி அல்லது 07ம் திகதியன்று மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடாது சஜித் தனியாக போட்டியிடுவாராயின் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினரும், வடக்கின் ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் தெற்கின் சிறு கட்சிகள் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருக்கும் பிரபலங்கள் 10 பேரும் சஜித்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் இவ் அறிவிப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.