ஹஜ் ஏற்­பா­டு­களை இலங்கை அர­சே கையாளும் !

3 haj
3 haj

2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் ஏற்­பா­டு­களை அர­சாங்கம் பொறுப்­பேற்று மேற்­கொள்­வ­தற்கு பிர­த­மரும் கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக்ஷ தீர்­மா­னித்­துள்ளார்.
 பிர­தமர் ஹஜ் குழு­வி­ன­ருடன் நடாத்­திய கலந்­து­ரை­யா­டலின் போதே இந்த இறு­தித்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.
ஹஜ் முக­வர்­களில் பலர் ஊழல் மோச­டி­களில் ஈடு­ப­டு­வ­தையும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளி­ட­மி­ருந்து கூடு­த­லான பணத்தை அற­வி­டு­வ­தையும் கருத்திற்கொண்டு இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்கருதி இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
கடந்த காலங்­களில் ஹஜ் முக­வர்கள் சிலரின் ஏமாற்று நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக அநேக ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் பல அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்­குட்­பட்­ட­தாலும் மற்றும் சில ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் உரிய கட்­டணம் செலுத்­தியும் கட­மையை நிறை­வேற்ற முடி­யாமல் போன­தையும் கவ­னத்திற் கொண்டு பிர­த­மரால் இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.