கேதகொட, அமரசிங்க, அஜந்தா பெரேரா ஆகிய மூவர் கட்டுப்பணத்தை செலுத்தினர்

Election 2019
Election 2019

நவம்பர் 16 ம் தேதி ஜனாதிபதித் தேர்தலை நடைபெறும் என வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது, அதன் பின்னர் இரண்டு சுயாதீன வேட்பாளர்களும் ஒரு அரசியல் கட்சி வேட்பாளரும் 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

ஜெயந்த கேதகொட மற்றும் சிறிபால அமரசிங்க ஆகியோர் சுஜேட்சை வேட்பாளர்களாகவும் டாக்டர் அஜந்தா பெரேரா இலங்கையின் சோசலிஸ்ட் கட்சி சார்பிலும் தேர்தல் ஆணையகத்தில் கட்டுப்பணத்தினை நேற்று (19.09.2019) செலுத்தியுள்ளனர் என தேர்தல் பணிப்பாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜெயந்த கேதகொட ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், சிரிபால அமரசிங்க முன்னாள் ஜனதா விமுக்தி பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்களாவர்.

ஒக்டோபர் 6ம் திகதி மதியம் 12 மணி வரை ஜனாதிபதித் தேர்தலுக்கான வைப்புத்தொகை ஏற்றுக்கொள்ளப்படும். ஒரு அரசியல் கட்சி வேட்பாளரால் 50,000 ரூபா பணத்தினையும் சுயேட்சைக் குழு வேட்பாளரால் 75,000 ரூபா பணத்தினையும் செலுத்த வேண்டும்.