06 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்து வெற்றி

match
match

அயர்லாந்தில் நடைபெற்று வருகின்ற T20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட இப்போட்டியில் ஸ்கொட்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. 124 எனும் இலகுவான வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 13.2 ஓவர்களில் 126 ஓட்டங்களைப் பெற்று 06 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலுள்ளது. நாளை அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையில் தொடரின் கடைசி லீக் ஆட்டம் இடம்பெறவுள்ளது.