ஷாபி சிஹாப்தீனின் விரிவான விசாரணை ஆரம்பம்

CID
CID

வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் சத்திர சிகிச்சை மூலம் குழந்தைப் பேற்றை இல்லாமல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ள இவரின் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வழங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவரிடம் வேறு நபர்களின் பெயர்களில் சொத்துக்கள் இருப்பதற்கான தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தொடர்பில் விசாரணை ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளது.