கொக்கட்டிச்சோலை இறால் பண்ணை படுகொலை – 33வது நினைவேந்தல்

Kokkadichcholai 2
Kokkadichcholai 2

1987ம் ஆண்டு சனவரி 27, 28 ஆம் நாட்களில் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் இறால் பண்ணையொன்றில் பணியாற்றிய உள்ளுர் பணியாளர்கள் உட்பட 87 பேர் வரை கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டிருந்தனர்.

1987ம் ஆண்டு மட்டக்களப்பின் வவுணதீவு, பட்டிருப்பு மற்றும் வெல்லாவெளி ஆகிய பகுதியில் பலருக்கு தொழில் வாய்ப்பு வழங்கிய அமெரிக்க முதலீட்டு இறால் வளர்ப்பு பண்ணை இலங்கை படையினரின் முற்றுகைக்குள்ளானது.

உள்ளுர் பணியாளர்கள் உட்பட 87 பேர் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு வீதியில் போட்டு எரிக்கப்பட்டனர்.

இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 14 வருடங்களின் பின்னர் 1991 ஜூன் மாதம் 12ஆம் நாள் இடம்பெற்ற மற்றுமோர் படுகொலைச் சம்பவத்தில் இலங்கை இராணுவத்தினரால் பெண்கள், குழந்தைகள் உட்பட 152 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது