சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவும் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள்

00 6
00 6

இலங்கையின் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டஉறவுகளின் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்,

கிளிநொச்சியில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இறுதி யுத்தத்தில் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பில் அரசு அக்கறை செலுத்தாத நிலையில், சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு அரசு தயாராகி வருகின்றது.

இந்நிலையில் சுதந்திர தினத்தன்று துக்க தினமாக அனைத்து மக்களும் அனுஷ்டிக்குமாறும், அன்றைய தினம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த தினத்தன்று வடக்கிலும், கிழக்கிலும் ஒவ்வொரு போராட்டம் சம நேரத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.