கரைச்சி பிரதேச சபையில் கைகலப்பு!

1 karachchi
1 karachchi

கரைச்சி பிரதேச சபை விசேட அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்களிக்கும் இடையில் கை கலப்பு ஏற்பட்டுள்ளது.

ஆதனவரி அறவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில், வர்த்தகர் ஒருவர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். இதன்போது விசேட அமர்வு ஒன்றினை நடத்தி இந்த விடயம் ஆராயப்படும் என வாக்குறுதியும் வழங்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் கரைச்சி பிரதேச சபை விசேட அமர்வு இன்று  2 மணியளவில் ஆரம்பமாகியது.

இதன்போது குறித்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் சந்திரகுமார் தலைமையிலான உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து 10 நிமிடங்கள் சபை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் சபை அமர்வுகள் ஆரம்பமாகியபோதும் வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பு வரைசென்றுள்ளது   .

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஜீவராசாவுக்கும் சுயேட்சைக்குழு உறுப்பினர் ரஜனிகாந்த்க்கும் இடையில் கைகலப்பு நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தாக்குதலுக்கு இலக்காகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.