ஐ.தே.க இன் செயற்குழுக் கூட்டம் இன்று

1 unp
1 unp

ஐக்கிய தேசிக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (30) ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இதன் போது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் நேற்று (29) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கட்சியில் உள்ள சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும், கட்சித் தலைவருக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பும் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.