சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் – நாம் வேறு நாடு என்பதை கோட்டா அங்கிகரிக்கிறாரா- விக்கி !

viki
viki

தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாவிடின் அதனை எண்ணி தமிழ் மக்கள் கவலைப்பட போவதில்லை என வடமாகாண முன்னாள் முதலமைச்சர், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம், நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை தெரிவித்தார். இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும் என ஜனாதிபதி சமீபத்தில் கூறியிருந்தார். அதைப் பற்றி க.வி.விக்னேஸ்வரன் காத்திரமான விளக்கத்தை வழங்கியுள்ளார் .

தமிழ் மக்களுக்கு தனித்துவமான கலாசாரம், மொழி மற்றும் நிலம் ஆகியன இருந்த போதும், அதனை விட்டுக்கொடுக்க பெரும்பான்மை மேலதிக அரசு தயார் இல்லை. தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாவிடின் அதனை எண்ணி தமிழ் மக்கள் கவலைப்பட போவதில்லை.

மாறாக சிறுபான்மையினரின் மொழிகளான ஆங்கிலம் மற்றும் வேடுவ மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுமானால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிட்டும். ஆனால் அது எந்தளவு சாத்தியமானது என்பது சந்தேகத்திற்குரியது என தெரிவித்தார்.