ஒட்டுசுட்டான் தரிசு காணிகளை பயிற்செய்கைக்கு பயன்படுத்தும் செயற்றிட்டம்

IMG 7883
IMG 7883

தரிசான வயல் காணிகளை பயிரிடும் தேசிய விழாவின் முதற்கட்டமாக ஒட்டுசுட்டான் மன்னாகண்டல் பிரதேசத்தில் கைவிடப்பட்ட தரிசு காணிகளை பயிற்செய்கைக்கு உட்படுத்தும் செயற்றிட்டம் இன்று (30) நடைபெற்றது,

ஜனாதிபதியின் கருப்பொருளின் கீழ் முதற்கட்டமாக ஒட்டுசுட்டான் கமநல அபிவிருத்தி நிலைய பொறுப்பதிகாரி சற்குணநேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கமநல உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கனகரத்தினம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் கிராம அலுவலர் பாலராணி ,தொழில்நுட்ப உத்தியோகத்தர் கார்த்திகேயன், அபிவிருத்தி உத்தியோகத்தர் மிரோஜன் மற்றும் பல விவசாய பெருமக்களும் கலந்து கொண்டனர்.