சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மாற்று சத்திர சிகிச்சை- வைத்தியர் சத்தியமூர்த்தி

sathiyamoorthy
sathiyamoorthy

யாழில் சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளானவர்கள் 180பேர் உள்ள நிலையில் இவர்களில் 24 பேரிற்கு சிறுநீரகம் மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலமையும் உள்ளது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

குறித்த சிகிச்சைப் பிரிவிற்கு இதுவரை காலமும் பணியாற்றிய வைத்திய நிபுணர் இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில் தற்போது விசேட நிபுணர் ஒருவர் கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

இதனால் குறித்த சிகிச்சை தடையின்றி இயங்கும். அதேநேரம் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியவர்களிற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.

மரணத்தின் பின்பு தனது சிறுநீரகத்தை தானம் செய்ய சம்மதம் தெரிவிப்பவர்களிடமிருந்து அதனை உடனடியாகவே பெற்று பாதுகாத்து தேவையான ஒருவரிற்கு அதனை பொருத்தும் வசதி வாய்ப்புக்களுடன் கொண்ட ஓர் விடுதியை 200 மில்லியனில் அமைக்க திட்டமிட்டு அனுமதி கோரியுள்ளோம் .

அதற்கான சந்தர்ப்பமும் கைகூடியுள்ளது. அதனால் குறித்த கட்டிடம் 2021இல் அமைக்கப்படவுள்ளது.

இதன்மூலம் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையும், ஒருவர் மரணித்தாலும் ஒரு மணி நேரத்திற்குள் அவரது சிறுநீரகத்தை வழங்க சம்மதிப்போரிடமிருந்து பெற்று அதற்கான தேவையுடையவர்களிற்கு பொருத்தும் வசதி வாய்ப்பினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்படுத்தவுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.