சுப்பர் ஓவரில் நியூஸிலாந்தை மீண்டும் வீழ்த்தியது இந்தியா!

india and new zealand twenty 20 54f6f23e 42a0 11ea bfa0 35d85fc987f6
india and new zealand twenty 20 54f6f23e 42a0 11ea bfa0 35d85fc987f6

நியூஸிலாந்து அணிக்கெதிரான நான்காவது பரபரப்பான ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்தியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

வெலிங்டனில்நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றது.

இதில் இந்தியா அணி சார்பில், லோகேஷ் ராகுல் 39 ஓட்டங்களையும், மனிஷ் பாண்டே 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், இஷ் சோதி 3 விக்கெட்டுகளையும், ஹமீஸ் பென்னட் 2 விக்கெட்டுகளையும், ஸ்கொட் குகலீஜ்ன், டிம் சவுத்தீ மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 166 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் போட்டி சமநிலைப் பெற்றது.

இதன்போது நியூஸிலாந்து அணி சார்பில், கொலின் முன்ரோ 64 டிம்செய்பர்ட் 57 ஓட்டங்களையும், பெற்றுக்கொண்டனர்.

இந்தியா அணியின் பந்துவீச்சில், சர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

வெற்றி இலக்கு சமநிலைப் பெற்றதால், வெற்றியாளரை தெரிவு செய்யவதற்கு சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.

பரபரப்பான சுப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 13 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

14 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை களமிறங்கிய இந்தியா அணி, ஐந்து பந்துகளில் வெற்றி இலக்கை கடந்து வெற்றியை பதிவு செய்தது.