முஸ்லிம்களின் நகரம் கல்முனை – ஜனாதிபதி சட்டத்தரணி

FB IMG 1580521898760 1
FB IMG 1580521898760 1

சிங்கள மக்களின் நகரம் கண்டி என்பது போல, தமிழர்களின் நகரம் யாழ்ப்பாணம் போல, கிறிஸ்தவர்களின் நகரம் நிகம்பு போல, முஸ்லிம்களின் நகரம் கல்முனை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாயில் முன்பாக நேற்று (31) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

மறைந்த மாபெரும் தலைவர் எம். எச்.எம் அஷ்ரப் அவர்களுக்கும் எனக்கும் இடையிலான உறவு 1974 இருந்து ஆரம்பமானதாகும்.

இந்த நாட்டில் முஸ்லீம்களுக்கென தீவிரவாத இயக்கம் இருக்கவில்லை. தீவிரவாத கொள்கைகளை ஆதரித்ததுமில்லை.

நாங்கள் பெரும்பான்மை சமூகத்துடன் சேர்ந்து இணைந்து வாழ வேண்டும்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் சிறந்த ஒரு ஜனாதிபதியை பெற்றிருக்கிறோம் இந்த ஜனாதிபதி சொல்வதைத்தான் செய்வார் செய்யக்கூடியதைத்தான் சொல்வார்.

எமது நாடு முன்னேற வேண்டும் என்றால் பாதுகாப்பு அவசியம் மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ பாதுகாப்பு அவசியம். அந்த பாதுகாப்பை உறுதி செய்யக் கூடியவர் எமது ஜனாதிபதி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஜாதி பேதங்களை மறந்து நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.