மேலும் 204 மாணவர்கள் சீனாவில் ; இலங்கைக்கு அழைக்க நடவடிக்கை!

1 wsd
1 wsd

சீனாவிலிருந்து இலங்கைக்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ள மேலும் 204 இலங்கை மாணவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதாக ​வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக பீஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை கொன்சியூலர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தம் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இதுவரையில் 305 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் தொற்று தொடர்பாக சுமார் 16 நாடுகளில் 130க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சீனாவில் உள்ள ஏனைய நாட்டவர்களை தத்தமது நாடுகளுக்கு அழைத்து வரும் முனைப்பில் உலக நாடுகள் செயற்பட்டு வருகின்றன.