சுதந்­தி­ரத்­திற்­காக தம்மை அர்ப்­ப­ணித்தவர்களுக்கு தேசத்தின் கௌரவம்

64 n f
64 n f

இன, மத, குல பேத­மின்றி நாட்டின் சுதந்­தி­ரத்­திற்­காக தம்மை அர்ப்­ப­ணித்த அனை­வ­ருக்கும் தேசத்தின் கௌரவம் கிடைக்­கப்­பெற வேண்டும் என தெரி­வித்­தி­ருக்கும் எதிர்க்­கட்சித்தலைவர் சஜித் பிரே­ம­தாச ஒற்­று­மை­யுடன் முன்­னோக்கி பய­ணிப்­பதே வர­லாறு கற்­றுத்­தந்­துள்ள பாடம் எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

72 ஆவது சுதந்­திர தின வாழ்த்துச் செய்­தியில் இதனை தெரி­வித்­தி­ருக்கும் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:

சகல பேதங்­க­ளையும் மறந்து எல்­லோரும் ஒன்­றி­ணைந்து கூட்­டான போராட்­டத்தின் பெறு­பே­றாக 1948 ஆம் ஆண்டில் இலங்கை கால­னித்­துவ ஆட்­சியின் கோரப்­பி­டி­யி­லி­ருந்து சுதந்­திரம் பெற்­றது. 72 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் நாம் பெற்ற அந்த சுதந்­தி­ரத்தை இன்­றைய தினம் பெரு­மி­தத்­துடன் கொண்­டா­டுவோம்.

சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பல­த­ரப்­பட்ட போராட்­டங்­களின்போது உயிர்த்­தி­யாகம் செய்த போரா­ளி­களை இச்­சந்­தர்ப்­பத்தில் மிகவும் பெரு­மை­யு­டனும் கௌர­வத்­து­டனும் நினைவுகூருதல் வேண்டும். அவர்­க­ளு­டைய உயிர்மூச்சு இந்த நாட்டின் சிரேஷ்ட வர­லாற்றின் அதி உன்­னத குறிப்­புக்­க­ளாகும்.

இன, மத, குல, சாதி போன்ற பேதங்­க­ளின்றி ஒன்­றாக இணைந்து இந்த நாட்டின் சுதந்­தி­ரத்­திற்­காக அர்ப்­ப­ணித்­துள்ள அனை­வ­ருக்கும் தேசத்தின் கௌரவம் கிடைக்­கப்­பெ­றுதல் வேண்டும்.

வர­லாறு எமக்கு கற்­றுத்­த­ரு­கின்ற பாட­மாக இருப்­பது ஒற்­று­மை­யுடன் முன்­னோக்கி பய­ணிப்­ப­தை­யே­யாகும். எனினும், நாடு என்ற வகையில் பெற்­றுக்­கொண்ட வெற்­றிகள், அடைந்த பின்­ன­டை­வுகள் மற்­று­மல்­லாது தோல்­விகள் போன்­ற­வற்­றைத்­தாண்டி கடந்துசென்ற 72 வரு­டங்­களின் போது எமக்கு பல்­வே­று­பட்ட அனு­ப­வங்­களை வழங்­கு­கின்­றது.

முற்­போக்கு சிந்­த­னை­யோடு அபி­மா­ன­மிகு வர­லா­றொன்­றைக்­கொண்ட நாடொன்­றாக உல­கிற்கு முன்­மா­தி­ரி­யொன்றை வழங்­கி­யுள்ள இலங்­கை­யா­னது தற்­பொ­ழுது அர­சியல் சந்­தர்ப்­ப­வா­தத்­திற்கு இரை­யாக்­கப்­பட்ட பலி­பீ­ட­மாக உரு­வெ­டுத்­துள்­ளது. அவ்­வாறு நோக்கும்போது கால­னித்­துவ ஆட்­சி­யி­லி­ருந்து சுதந்­தி­ர­ம­டைந்­த­மை­யைத்­த­விர இந்­நாட்டு மக்கள் அடைந்துகொள்ள இன்னும் அனேக விட­யங்கள் இருக்­கின்­றன.

அர­சியல் பழி­வாங்­கல்கள் இல்­லாத நாடொன்று, பொரு­ளா­தார, அர­சியல், கலா­சார மற்றும் சிவில் சுந்­தி­ரத்­தைப் ­பா­து­காப்­ப­தற்­கான சுபீட்­சம்­மிகு நாடொன்று, உலகில் கௌர­வத்­துடன் தலை­நி­மிர்ந்து நிற்­க­க்கூ­டிய நாடொன்றை உருவாக்குவதற்கான போராட்டம் இன்னும் முடியவில்லை.

அந்நோக்கத்திற்காக எல்லா நேரங்க ளிலும் அர்ப்பணிப்புச் செய்யும் உயர் அபிலாசைகள் நிறைந்த, கௌரவமான சுதந்திர தினமொன்றுக்காக முழு நாட்டுக்கும் பிரார்த்திக்கின்றேன் என்று அவ்வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டள்ளார்.