கோட்டாபய அரசு பொருளாதாரரதியில் எடுத்த தீர்மானங்கள் தவறானது!

1 sa
1 sa

“நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறும் நோக்கில் கோட்டாபய அரசு பொருளாதார ரீதியில் தற்போது முன்னெடுத்துள்ள தீர்மானங்கள் முற்றிலும் தவறானதாகும்.

இந்த நிலைமை தொடர்ந்தால் அரசு அடிப்படைச் செலவுகள் அனைத்தையும் குறைத்துக்கொள்ள நேரிடும்” என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

“மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறும் நோக்கில் பொருளாதார ரீதியில் கோட்டாபய அரசு எடுத்த தீர்மானங்களினால் இன்று நுகர்வோர், வியாபாரிகள் மற்றும் நடுத்தர மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

தேசிய பொருளாதாரம் தொடர்பான கொள்கைகளைப் பாரம்பரிய அடிப்படையிலே இன்றும் நாம் பின்பற்றுகின்றோம். நல்லாட்சி அரசும், நடப்பு அரசும் பழைய பொருளாதார கொள்கைகளுக்கு அமையவே செயற்பட்டன, செயற்படுகின்றன.

புதிய பொருளாதாரக் கொள்கை முறைமை தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. அதற்குப் பல்வேறுபட்ட அரசியல் மற்றும் பொதுக்காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன” என்றார்.