ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஜனாதிபதி யாது தெரிவித்தார்?

president
president

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்ற விசேட தெரிவு குழு அங்கத்தவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சாட்சியங்களை பெற்றுக்கொள்வதற்காக நேற்றைய தினம் காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்தனர்.

நேற்று காலை 10 மணிக்கு தமது விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்தது. சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்ற இந்த விசாரணைகளின் போது பல்வேறு காரணிகள் ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டுள்ளது.

இதன்போது ஊடகங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டு ஜனாதிபதி செயலகம் ஊடாக சில முக்கியமான தகவல்கள் மாத்திரம் ஊடகங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹரான் குறித்தும் இவ்வாறான ஒரு தாக்குதல் திட்டம் இருப்பது தெரிந்தும் பொலிஸ்மா அதிபரோ பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவோ என்னிடம் எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் அனாவசியமான விடயங்கள் குறித்து என்னிடம் பேசிய நபர்கள் அவசியமான விடயத்தை மறைத்துள்ளனர் என பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன் பாதுகாப்பு குழுக்கூட்டம் நம்பிக்கைக்குரிய இடமாக கருதவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.