சஜித் பேசும்போது, ஒலிவாங்கியை நிறுத்த குழு

1 er 5
1 er 5

நல்லாட்சி அரசினால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்புக்களில் இருந்து பலரையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் நீக்கியிருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

2014ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்சவினால் வழங்கப்பட்ட அரசியல் நியமனங்களைக்கூட நாங்கள் நிராகரிக்கவில்லை. இப்படியான கீழ்த்தரமான, ஈனச் செயலை நாங்கள் செய்யவில்லை.

ஆனால் இந்த அரசாங்கமே செய்கின்றது. அரச தொழிலில் உள்ளவர்களை கழுத்தை பிடித்து அரசாங்கம் வெளியேற்றும் செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச அப்போது பிரதமராக இருந்த காலத்தில் இந்த ஆசனத்திலிருந்து உரையாற்றியபோது எப்போதும் ஒலிவாங்கி செயலிழப்பு செய்யப்படவில்லை.

ஆனால் எனது ஒலிவாங்கியை நான் பேசும்போது நிறுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத்தின் சம்பிரதாயத்திற்கு முரணானது, பிழையானது” என கூறியுள்ளார்.