செம்மலை சர்ச்சைக்குரிய பிக்கு மரணம்!

pikku
pikku

முல்லைத்தீவு பழையச் செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பு மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார் .

கொழும்பு மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்கு மிக நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் குருகந்த ரஜமஹா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்து பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்களுடன் சர்ச்சைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.