வெளியில் இருந்து ஐக்கியம் பேசுகின்ற யாரும் எம்முடன் பயணிக்கலாம் -சுரேஷ்பிரேமச்சந்திரன்

suresh premachandran 6dae9489 7aaa 491c ac2c e60b7e1454b resize 750
suresh premachandran 6dae9489 7aaa 491c ac2c e60b7e1454b resize 750

வெளியில் இருந்து ஐக்கியம் பேசுகின்ற யாரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு ரில்கோ விருந்தினர் விடுதியில் நேற்று(09) இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் இன விடுதலைக்காக பல தரப்புக்கள் போராடியுள்ளனர். தங்களின் உயிர்களை பொருட்படுத்தாது போராடிய அனைவரையும் எமது கூட்டணியில் இணையுமாறு இந்த சந்தர்ப்பத்திலே அழைப்பு விடுக்கின்றேன்.

எமது கூட்டணி அமைக்கப்பட்டதன் நோக்கம் தமிழ் மக்கள் இத்தனை ஆண்டுகளாக கோரி வந்த இனப்பிரச்சனைக்கு ஆக்கபூர்வமான தீர்வு கிடைக்க வேண்டும்.

எனவே தற்போது எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும், தமிழரின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் ஆகிய அடிப்படையான விடயங்கள் முக்கய கவனம் செலுத்த வேண்டும்.

எமது கட்சிக்கு என்று நாற்பது ஆண்டுகால வரலாறுகள் உள்ளது.ஏறாத்தால முப்பது ஆண்டுகள் நாம் பாராளுமன்ற ஜனநாயக முறைமையை ஏற்று செயட்பட்டிருக்கின்றோம்.அதற்கு முன்னர் ஆயுதப் போராட்டம் நடத்தியிருக்கின்றோம்.

தமிழ் மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க மிகப்பெரிய போராட்டங்களை செய்திருக்கின்றோம்.பாரிய அழிவுகளை சந்தித்திருக்கின்றோம்.எமது உரிமைக்காக அனைத்தையும் இழந்துள்ளோம். இழக்கக்கூடாத பல இழப்புக்களை சந்தித்துள்ளோம்.

ஆகவே வெளியில் நின்று வெறுமனே ஐக்கியத்தை பேசுவதை விட நாங்கள் ஒன்றாக சேர்ந்து செயற்பட வேண்டும்.சிங்கள பௌத்த அரசு எதுவாக இருந்தாலும் அவர்களை பாதுகாப்பதை விடுத்து இன்று இருக்கக் கூடிய அக புற சூழ்நிலைகள அனைத்தயும் கவனத்தில் எடுத்து நாம் எவ்வாறு செயற்பட வேண்டும்.அதன் ஊடாக தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என சிந்திக்க வேண்டும்.

அதற்காக நாம் இது தொடர்பில் அனைத்து தரப்பும் இணைந்து விவாதித்து நாம் ஆக்கபூர்வமாக செயற்படுவோம் என தெரிவித்துள்ளார்.

Share