தேசிய சம்பள கொள்கையை வகுக்க ஆணைக்குழு!

1eww
1eww

தேசிய சம்பள கொள்கையை வகுக்கும் முகமாக தேசிய சம்பள ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஆரசியலமைப்பின் 33ஆவது பந்தியின் அடிப்படையில் ஜனாதிபதி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் இதனை அமைத்துள்ளார்.

இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டவுடன் 2019 மார்ச் 18ஆம் திகதி அமைக்கப்பட்ட தேசிய சம்பள ஆணைக்குழு கலைக்கப்படுகிறது.

பொது மற்றும் தனியார்துறையில் பணியாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு உரிய சம்பளங்களை பெற்றுக் கொடுக்கவும், பொது மற்றும் தனியார் துறைகளை நிலையான வகையில் வருமானத்தை முன்னெடுத்து செல்லவும் இந்த ஆணைக்குழு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவில் 15பேர் இடம்பெறுகின்றனர். இந்த ஆணைக்குழுவில் தமிழர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.