கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் நாட்டில் மீண்டும் மோசடிகள்

1 vb
1 vb

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் நாட்டில் மீண்டும் மோசடிகள் மேலோங்கி உள்ளது. இந்நிலையில் , நாட்டு மக்களின் நலன் கருதி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்படும் கூட்டணியை வெற்றிப்பெற செய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜெயமுணி சொய்சா தெரிவித்தார்.

கடந்த ஐனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச 57 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ள நிலையில், அந்த எண்ணிக்கையை பொதுத்தேர்தலின் போது வலுவான வெற்றிக்காக அதிகரிக்க வேண்டியது அவசியமானதாகும் எனவும் அவர் மேலும் கூறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,

69 இலட்சம் வாக்குகளை பெற்று வியத்மக அமைப்பின் ஊடாக ஆட்சி பீடமேறிய ஜனாதிபதி கோதாபயராஜபக்ஷவின் மற்றைய தரப்பினரும் பொதுத்தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.

அதேபோல் , ஐக்கிய தேசிய கட்சியும் பலம் வாய்ந்த கூட்டணியாக பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றது.

அந்த வகையில் மக்கள் விரும்பும் தலைவரும் , ஐக்கிய தேசிய கட்சியின் பிள்ளையுமாகிய சஜித் பிரேமதாசவின் தலைமையில் பலம் வாய்ந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆத்ம கொரவத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எதிர்வரும் ஏப்பிரல் மாதமாகும்போது ,புதிய தலைமைத்துவம் புதிய பாராளுமன்றம் , புதிய வேலைத்திட்டங்கள் அகியவற்றை முன்னெடுத்து செல்ல வேண்டியது அவசியமாகியுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.