இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உதவி செய்ய ஜேர்மன் தயார்!

1 fs
1 fs

தமது நாடு தொடர்ந்தும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உதவி செய்ய தயாராகவே உள்ளதாக ஜேர்மன் தெரிவித்துள்ளது.

ஜேர்மனின் அனைத்து கட்சி நாடாளுமன்றக்குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.

பெப்ரவரி 19 – 24 ஆம் திகதிகளில் இந்த பயணம் அமைந்திருந்தது.

இந்த நிலையில் குறித்த குழுவினர் இலங்கையில் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட்டவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இதன்போது இலங்கைக்கு ஜேர்மனின் முதலீடுகள் குறித்து இலங்கை தரப்பால் கோரிக்கைககள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் சமூக மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும் ஜேர்மனின் உதவிகள் கோரப்பட்டன.

இந்த நிலையில் தொடரும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உதவ தயாராக இருப்பதாக ஜேர்மன் குழுவினர் குறிப்பிட்டதாக ஜேர்மனின் இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.