ராஜிதவின் கோரிக்கையை நிராகரித்தது கோட்டாபய அரசு! உடன் வெளியேறவும் உத்தரவு

Rajitha Senaratne
Rajitha Senaratne

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை மேலும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

தனது கோரிக்கையை அவர் பொது நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனுக்கு எழுத்துபூர்வமாக கோரிக்கை விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அவரின் கோரிக்கையை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும், உத்தியோகபூர்வ இல்லத்தை உடனடியாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தென்னக்கோன் கூறியுள்ளார்.

அவர் அவ்வாறு செய்யாவிட்டால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மூன்று மாதங்களுக்கும் மேலாக முன்னாள் அமைச்சர்கள் அனைவருக்கும் தங்கள் வாசஸ்தலங்களை விட்டு வெளியேற அரசாங்கம் அவகாசம் அளித்திருந்தாலும், ராஜித சேனரத்ன தொடர்ந்து வாசஸ்தலத்தை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்து .