கிழக்கு மாகாண தமிழருக்கு ஒரு தனித்துவமான அரசியல் தேவைப்படுகின்றது- அருண்தம்பிமுத்து

1 ead
1 ead

இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழருக்கு ஒரு தனித்துவமான அரசியல் தேவைப்படுகின்றது இந்த வரலாற்றுக் கடமையை பெறுப்பேற்பதற்காகவே நாங்கள் செயலில் இறங்கியிருக்கின்றோம்.என மக்கள் முன்னேற்ற கட்சியின் செயலாளர் நாயகம் அருண்தம்பிமுத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு கிரான் கிராமத்தில் மக்கள் முன்னேற்ற கட்சியின் பிராந்திய காரியாலயத்தை இன்று 2020/03/01(ஞாயிற்றுக்கிழமை) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்

இந்த பிரதேசம் கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்ட்ட கிராமங்களில் கிரான் கிராமமும் ஒன்று அதேபோல் கோரளளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு பல தியாகங்களையும் துயரங்களையும் எதிர் நோக்கிய பிரதேசம்

வரலாற்று ரீதியாக பார்த்தோம் என்றால் கோரளைப்பற்று தெற்கில் 1977 காலப்பகுதிகளில் அரச அச்சகம், பால்பண்ணை, அரிசி ஆலை போன்ற முக்கிய அபிவிருத்தியை மறைந்த முன்னாள் அமைச்சர் கே.டபிள்யூ தேவநாயகம் முன்னெடுத்திருந்தார்.

இருந்த போதும் கடந்த 30 ஆண்டு யுத்தத்தினால் இந்த பிரதேசம் பாரிய கஷ்டத்தின் மத்தியில் இருக்கின்றது அரசு 40 ஆயிரம் கோடி ரூபா பணத்தை செலவழித்தும் கூட மக்களின் வாழ்வாதாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்ற விடயத்தை உணர்ந்து இன்று மக்கள் முன்னேற்ற கட்சி இந்த பிராந்தியத்தில் செயற்பாடுகளை செய்வதற்கான செயலகத்தை திறந்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் இந்த காலகட்டத்தில் தமிழருக்கு ஒரு தனித்துவமான அரசியல் தேவைப்படுகின்றது. இந்த வரலாற்றுக் கடமையை பெறுப்பேற்பதற்காக நாங்கள் செயலில் இறங்கியிருக்கின்றோம். இன்று அரசு உணரவேண்டிய விடயம் அபிவிருத்தி. அபிவிருத்தி என்ற பெயரில் வெறுமனவே பாதைகளையும் பாலங்களையும் கட்டுவதன் மூலம் மக்களின் வாழ்வில் மாற்றம் வரப்போவதில்லை.

மக்களின் வாழ்வாதாரத்துக்கான மாற்றங்கள் உருவாக்க வேண்டும் அதற்கான செயற்திட்டங்களை நாங்கள் செய்ய இருக்கின்றோம். அதேபோல் தாங்கள் தான் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று கூறுகின்ற அரசியல்வாதிகள் எல்லோரும் ஒரு விடயத்தை உணரவேண்டும் . உரிமையும் அபிவிருத்தியும் வேறொரு விடயமல்ல இரண்டும் எமது மக்களுக்கு அவசியமானவை

தமிழரசு கட்சியின் நாடாளமன்ற உறுப்பினர் சுமந்திரன் புலிகள் இயக்கம் சகோதரப் படுகொலை மூலமாக வளர்ந்தது என தெரிவித்திருந்த இவர் பல நாடுகளுக்குச் சென்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் உதவிகளின் மூலம் அரசியல் செய்கின்றனர். அவ்வாறே நாடாளளுமன்ற உறுப்பினர் இரா. சம்மந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருப்பதற்கான அடிப்படை காரணமே விடுதலைப் புலிகள் தான்.

இன்று தமிழ் தேசிய வாதிகளாக தம்மை அடையாளம் காட்டுபவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் அரசுடனும் அரச படையுடனும் இனைந்து செயற்பட்டவர்கள் என தமிழ் மக்கள் உணரவேண்டும். உண்மையாகவே தமிழர்களின் நலனைக்கருதி அரசியல் செய்தார்களா? என்று மக்கள் கேட்கவேண்டிய காலம் இது

எனவே மக்களின் பொருளாதாரத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் அதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் செயற்திட்டத்தை செய்ய இருக்கின்றோம். விவசாயம், மீன்பிடித்துறை, கல்வி, சுகாதாரம், போன்ற விடயங்களை எமது திட்டத்தை முன்வைத்து மக்களின் தேவைகளை பூர்தி செய்வதற்காக எமது அரசியலை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.