எந்த சக்திக்கும் அடிபணிந்து செயற்படுபவன் நான் அல்ல – நீதியரசர் விக்னேஸ்வரன்

Wigneswaran2
Wigneswaran2

நான் கட்சி தொடங்கிய பின்னர் இந்தியாவிடமிருந்து எனது அரசியல் தொடர்பில் எந்த அழுத்தமோ அல்லது தொடர்போ இருக்கவில்லை. எனது மக்களின் அபிலாசைகள் தொடர்பில் எந்த சக்திக்கும் அடிபணிந்து செயற்படுபவன் நான் அல்ல. இந்தியா எனக்குப் பின்னால் இருந்தால், அதனை எனது மக்களுக்கு வெளிப்படையாக சொல்வதற்கு நான் தயங்கமாட்டேன், தயங்க வேண்டிய தேவையும் இல்லை.

என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்

இந்தியா என்னுடன் உறவை ஏற்படுத்தி நெருக்கமாக செயற்பட விரும்புகிறதோ என்னவோ எனக்குத் தெரியாது. இவ்வாறான இந்திய முயற்சிகள் எதுவும் இன்றுவரையில் நடைபெறவில்லை.

ஆனால் எமது மக்களின் உரிமைகளை பெறுவதற்கு இந்தியாவின் உதவி எமக்கு அவசியம் என்பதை நான் தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளேன். இந்தியாவை தமக்கு சார்பாக செயல்பட வைப்பதற்கு எல்லா முயற்சிகளையும் என்னால் முடிந்தளவுக்கு . அண்மையில் ஆய்வாளர் நிலாந்தன் கூறியதுபோல அரசியல் வங்குரோத்து காரணமாக சில கட்சிகள் கூறிவரும் சூட்டி கோட்பாடுகளே இவை சேர்ந்தால் எம்மவர் சேராவிட்டால் இந்தியாவின் அடிவருடிகள் என்ற சூட்டி கோட்பாடு நெடுங்காலம் நின்று பிடிக்க மாட்டார் உண்மை வெளிவரும்.

சர்வதேச விசாரணை முடிந்து விட்டதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் முடியவில்லை .நடந்தது என்னவென்ற உண்மைகளை கண்டறியும் செயற்பாடுகளே ஐ.நா. மட்டத்தில் நடைபெற்றுள்ளன. இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன என்பதை சர்வதேச நீதிமன்றம் ஒன்றின் ஊடாக விசாரணை செய்யும் எந்த ஒரு சர்வதேச விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை.

சிலவேளை, எவருக்காவது, அவர்களின் கனவில் இது நடைபெற்றிருக்கலாம். ஆச்சரியம் என்னவென்றால், இவ்வாறு சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்று கூறுபவர்கள், கல்வியிலும் புத்திக்கூர்மையும் சிறந்த எமது மக்களை அந்த அளவுக்கு குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கிறார்களா? என்பதுதான்.எனவும் தெரிவித்தார்.