இன்னும் சற்று நேரத்தில் கலைகிறது நாடாளுமன்றம்:ஏப்ரல் 25 தேர்தல்

SDSDSD
SDSDSD

இலங்கை நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவுடன் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இந்த வர்த்தமானி அச்சிடுவதற்காக அரச அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசி பொதுத் தேர்தல் 2015, ஒகஸ்ட் 16-ஆம் திகதி நடைபெற்றது. முதல் நாடாளுமன்ற அமர்வு செப்டம்பர் 1, 2015 அன்று நடைபெற்றது.

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் கீழ் நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

இன்னிலையில் நாடாளுமன்றம் கூடி நான்கரை ஆண்டுகள் முடிவடையும் நிலையில் தனக்குக் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே நாடாளுமன்றத்தைக் ஜனாதிபதி கலைக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.