பத்திரிகைச் சுதந்திரத்திற்காக அனைவரும் குரல்கொடுக்கவேண்டும் – மாவை

download 2
download 2

பத்திரிகைச் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல், அடக்கு முறைக்கு எதிராக ஜனநாயக சக்திகள், பத்திரிகையாளர், செய்தியாளர் அனைவரும் குரலெழுப்ப வேண்டும். என்று தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வவுனியாவிலிருந்து வெளிவரும் வாரப் பத்திரிகையின் நிறுவுனர் பிரகாஸ், அவர் மனைவி, பத்திரிகை ஆசிரியர் முதலானோரை கொழும்பு நாலாம் மாடிக்கு விசாரனைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரகாஸை அரசு உளவுத்துறையினர் வாரந்தோறும் விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்குவதாக ஏற்கனவே அறிந்திருந்தோம். விசாரணைகளின் போது அரசுக்குமாறான செய்திகளை வெளியிடக்கூடாது எனவும் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

குறித்த பத்திரிகைக்கும் நிறுவுனர் மற்றும் ஆசிரியர் ஆகியோருக்கு அரசினாலும் பாதுகாப்புத்தரப்பினாலும் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் பத்திரிகைச்சுதந்திரத்திற்கு ஏற்படுத்தப்படும் அடக்குமுறை என்றே நாம் கருதுகிறோம்.

இவ்வரசின் இத்தகைய அச்சுறுத்தல்களை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர்கள் பாதுகாப்பையும் பத்திரிகைச் சுதந்திரத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டுமென ஜனாதிபதியையும் சகோதரர் பிரதமரையும் வலியுறுத்துவதோடு

அரச தரப்பினால் மட்டுமல்ல தனியான குழுக்களினால் மதத்தின் பெயரால் பத்திரிகைச் சுதந்திரத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களும் நிறுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றோம்.