வவுனியாவில் ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தமை-சிவமோகன் எம்.பி கடும் கண்டனம்!

CID 1 768x484
CID 1 768x484

வவுனியாவில் அமைந்துள்ள தினப்புயல் என்னும் பத்திரிகை நிறுவனத்தில் ஆசிரியர்  அவரது பாரியார் மற்றும் தினப்புயல் ஊடகவியலாளரை வவுனியா குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நேற்றையயதினம்(2) விசாரனைக்கு அழைத்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து கேட்ட போதே சிவமோகன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்
இது தொடர்பாக சிவமோகன் எம்.பி மேலும் தெரிவிக்கும் போது

இந்த புதிய அரசு ஆட்சிக்கு வந்தபின்  நாடு முழுவதையும் இராணுவப் பிடிக்குள் கொண்டு வந்து மக்கள் மீது அராஜகங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இதன் ஒரு அங்கமாக   வவுனியாவில் உள்ள தினப்புயல் பத்திரிகை ஆசிரியர் அவரது பாரியார் மற்றும் செய்தியாளரை  வவுனியா குற்றப்புலனாய்வினர் விசாரனைக்கு அழைத்துள்ளனர்.
இந்த செயற்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது
தேர்தல் நெருங்கும் வேளையில் ஊடகவியலாளர்கள் மீது தனது கோர முகத்தை திருப்பி அச்சுறுத்தல் விடுக்கிறது இந்த அரசு
இதை ஒரு போதும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

யுத்தகாலத்தில்  ஊடகவியலாளர்கள்  பாரிய துன்பத்திற்கு நெருக்கடிகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.  பலர் கொலை செய்யப்பட்டார்கள் பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள்  யுத்தம் முடிந்து சில காலம் மட்டுமே நிம்மதியாக தங்களது ஊடக கடமைகளை செய்து வந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி பழிவாங்கும் நடவடிக்கையினை இந்த அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

இந்த இலங்கை நாட்டில் ஜனநாயகம் உயிரோடு உள்ளதை சர்வதேசம் நம்ப வேண்டுமானால் ஊடகவியலாளர்களை கைது செய்வது விசாரணைக்கு அழைத்து அச்சுறுத்துவது போன்ற செயற்பாடுகளை இந்த அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளார்.