45,585 பட்டதாரிகள் தொழில் வாய்ப்புக்கு தகுதி! நியமன கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கை பூர்த்தி.

externel degeree 1
externel degeree 1

ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்க்ஷவின் சுபீட்ஷமான எதிர்கால நோக்கில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன. இவர்களுக்கு நியமன கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.
தொழிலுக்காக விண்ணப்பித்தோர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பட்டபடிப்பை அல்லது அதற்கு சமமான டிப்ளோமாவை 2019ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் பெற்று இருப்பது அவசியமாகும்.
தொழில் கோரி அனுப்பபட்ட சுமார் 70 ஆயிரம் விண்ணப்பபடிவங்களில் 56 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே முறையாக பூர்த்தி செய்யப்பட்டுயிருந்தன. இவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மீள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. இதன்படி தகைமைகள் யாவும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட 45,585 விண்ணப்பதாரிகளுக்கே தொழில் வழங்கப்படவுள்ளன.