ஜெனீவா; முக்கிய அமர்வுகள் தவிர அனைத்து நிகழ்வுகளும் கொரோனோ அச்சத்தால் இரத்து!

corono unh
corono unh

இணை நிகழ்வுகளில் வீடியோ தொடர்பாடல் ஊடாக பங்கேற்கக் கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை 43-ஆவது அமர்வின் முக்கிய கூட்டங்கள் தவிர ஏனைய அனைத்து நிகழ்வுகளையும் தற்காலிகமாக இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகெங்ம் வேகமாகப் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் எலிசபெத் டிச்சி-பிஸ்ல்பெர்கர் தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. ஜெனீவா கிளையின் இயக்குநர் ஜெனரல் டாடியானா வலோவயாவிடம் இருந்து நேற்று திங்கட்கிழமை அவசர கடிதம் வந்த பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முக்கிய அமர்வுகள் தவிர அதனோடு இணைந்ததாக ஒழுங்கு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் கூட்டங்களையும் இரத்து செய்யுமாறு வலோவயா அவசர கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

43-ஆவது அமர்வில் முக்கிய கூட்டங்கள் தவிர்ந்த நிகழ்வுகளின் பங்கேற்பாளர்கள் ஜெனீவாவுக்கு வருவதைத் தவிர்த்து வீடியோ தொடர்பாடல் மூலம் அமர்வுகளில் பங்கேற்க ஆவன செய்யுமாறும் அவர் பரிந்துரைத்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு ஜெனீவாவில் பெப்ரவரி 24 ஆரம்பமானது. எதிர்வரும் மார்ச் 20 வரை இந்த அமர்வு நடைபெறவுள்ளது குறி;ப்பிடத்தக்கது.