முழு பூமியும் பௌத்த பூமியாகும்- ஞானசார தேரரின் சர்ச்சைக்குரிய கருத்து

gnanasara thero 1
gnanasara thero 1

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் வருகையினால் முல்லைத்தீவில் பதற்றம் நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் ஞானசார தேரர் முல்லைத்தீவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது

நாங்கள் கொழும்பில் ஒற்றுமையாக இருகிறோம், இவர்கள் வடக்கில் இருந்து வந்தவர்களா கிழக்கில் இருந்து வந்தவர்களா அல்லது கிளிநொச்சியா புதுகுடியிருப்பா என்று பார்ப்பது இல்லை. எவர் வந்தாலும் விரும்பிய இடத்தில் தொழில் செய்யலாம். எந்த இடத்திலும் கோவில்களை நிர்மாணிக்கலாம். ஊர்வலம் செல்லலாம் என தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், தீர்ப்பு எதுவாக இருந்தாலும் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த மதகுருவின் நல்லடக்க செயற்பாட்டை முன்னேடுப்போம் என தெரிவித்தார்.

இங்கு பௌத்த மதம் வந்ததுக்கு பின்னர்தான் இஸ்லாம்,கிறிஸ்தவம், இந்து மதங்கள் வந்துள்ளது. இந்த முழு பூமியும் பௌத்த பூமியாகும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

இந்நிலையில் மறைந்த தேரரின் உடலை விகாரைக்கு முன்னதாக உள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாது செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள குளத்தில் எரியூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒரு பௌத்த மதத்தைச் சேர்ந்த மதகுரு இன்னொரு மதத்தினுடைய விழுமியங்களை மதிக்காத தன்மை, நாட்டின் நீத்துறையை மதிக்காமை மற்றும் மக்களை சினப்படுத்துகின்ற வகையிலான பேச்சு மக்கள் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் நாட்டின் சட்டம் சிறுபான்மையினருக்கு மட்டுமா எனும் சிந்தனையினையும் ஏற்படுத்தியுள்ளது.