நாடாளுமன்ற ஆசனம்- ஆர்னோல்ட்டும் விண்ணப்பம்

images 4 1
images 4 1

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாநகர சபை மேயர் இ. ஆனல்ட் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் சமர்ப்பித்துள்ளார் நாடாளுமன்றம் நேற்று முன்தினம் கலைக்கப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஐந்து ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியை விரிவுபடுத்தி தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள மாவை சேனாதிராஜா,ஈ.சரவணபவன், ஸ்ரீதரன், எம்.ஏ சுமந்திரன், ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அத்துடன் பெண் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இன் துணைவியார் சசிகலா ரவிராஜ் களமிறங்கவுள்ளார். இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் கோட்டாவில் களமிறங்க ஏற்கனவே 16 பேர் விண்ணப்பித்துள்ளனர்.யாழ்ப மாநகரசபையில் மேயராக உள்ள ஆனல்டும் நேற்று விண்ணப்பித்துள்ளார். வடக்கு மாகண சபை உறுப்பினராக இருந்த ஆனல்ட் தேர்தலின்போது மாகாண சபையிலிருந்து விலகி மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்டார் என்பதும் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராகு எதிரான குழப்ப அணியாக அடையாளப்படுத்தப்பட்ட வர்களில் ஒருவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.