வடக்கு கல்விஅமைச்சில் இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பில் சி.வி.கே வலியுறுத்தல்!

cvk
cvk

வடக்கு மாகாணத்தில் கல்வித்துறையில் உள்ள ஊழல் தொடர்பில் கரிசனை காட்டுவதை வரவேற்றுள்ள வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், மாகாண சபை ஆட்சியில் இருந்த போது கல்விஅமைச்சில் இடம்பெற்ற பாரியமோசடி தொடர்பாக உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

மாகாண சபை ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பாக முதல மைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

குறிப்பாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சில் இரண்டு நாள் களில் 8 கோடி ரூபா பணம் செலவழிக்கப்பட்டமை விசாரணைக் குழுவால் கண்டறியப்பட்டுள்ளது.

அவ்வாறு 8 கோடி ரூபாவும் எவ்வாறு செல்வு செய்யப்பட்டது என்பது குறித்து பூரண கணக்காய்வு செய்யப்பட்டுத் தவறு இழைத்தவர்கள் எனக் காணப்படுபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அந்த விசாரணைக் குழு பரிந்துரைத்திருந்தது. எனினும் இன்றுவரை எவ்வித தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே உடனடி நடவடிக்கையை எடுக்குமாறு வடபிராந்திய கணக்காய்வாளர் நாயகத்துக்குக் கடிதம் அனுப்பிய நான் தகவலுக் காகவும் உரிய நடவடிக்கையை எடுக்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநருக்கும் பிரதம செயலருக்குப் பிரதிகளையும் அனுப்பியிருந்தேன். இது தொடர்பில் அண்மைலும் வடக்கு மாகாண ஆளுநரும் விரைந்து நடவடிக்கை எடுப்பேன். அதனை ஊடகங்கள் ன்னிலையில் தெரிவிப்பேன் எனக் கூறியிருந்தார்