தேரர்களின் செயற்பாடுகளிற்கு கோத்தபாய ராஜபக்ச ஆதரவு

kotabaya
kotabaya

இறந்த தேரரின் உடலை நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் தகனம் செய்யப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர் ராஜித சேனரத்ன ஆகியோர் தமது கண்டனத்தினை தெரிவித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச குறித்த தேரர்களின் செயற்பாடுகிற்கு தனது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச

“இந்த நாட்டில் பிக்குகளுக்குத் தனி மரியாதை உண்டு. ஆனால், அவர்களை அவமதித்து தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகளின் நடவடிக்கையினால்தான் முல்லைத்தீவு – நீராவியடியில் பதற்றம் ஏற்பட்டது”எனவும்

அவர் மேலும் கூறுகையில்,

“இறந்த விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை அமைதியான ஓர் இடத்தில் தகனம் செய்யவே பிக்குகள் தீர்மானித்திருந்தார்கள். ஆனால், தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகள் பிக்குகளை அவமதிக்கும் வகையில் செயற்பட்டார்கள்.

இந்தச் சட்டத்தரணிகள்தான் ஆலய நிர்வாகத்தினரையும் நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்று இந்த விவகாரத்தை ஊதிப்பெருக்கினார்கள். இது தேவையில்லாத நடவடிக்கை. அதற்காக நீதிமன்றத்தின் உத்தரவைவோ – தீர்ப்பையோ நான் விமர்சிக்க விரும்பவில்லை. களத்தில் என்ன நடந்தது என்று உண்மையில் எனக்குத் தெரியாது.

எனினும், அண்மைக் காலங்களில் பிக்குகளை அவமதிக்கும் வகையில் – அவர்களைச் சீண்டும் வகையில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது” என தெரிவித்துள்ளார்.