தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சின்னம் ‘மீன்’

CV Vikki 2
CV Vikki 2

தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கு மீன் சின்னத்தை தேர்தல் ஆணையகம் ஒதுக்கியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகிழக்கில் போட்டியிடும் ஒரே ஒரு பதிவு செய்யப்பட்ட கூட்டணியான தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணி புதிய சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பத்திருந்தது. சில இழுபறிகளுக்குப் பின்னர் மீன் சின்னம் ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன் சின்னமானது பாண்டிய மன்னர்களின் கொடியில் உள்ளது என்பதும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.