உலகத்தை பாதுகாக்க இலங்கை விகாரைகளில் பூஜை!!

7 s
7 s

கொரோனா பாதிப்பில் இருந்து உலகத்தை பாதுகாக்க வேண்டி நாளை சனிக் கிழமை நாட்டின் 25 மாவட்டத்திலும் உள்ள விகாரைகளில் சிறப்பு வழிபாட்டிற்கு அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்சில் இருந்து உலகம் மீட்சி பெறவும் , பாதிப்படைந்தோர் குணமடைவதோடு ஏனைய நாடுகள் அதில் இருந்து பாதுகாப்பு பெறவும் என சிறப்பு சாந்தி பூசையும், பிருத் ஓதுதலும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இதற்காக அரச பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இடம்பெறும் விசேட பூசையானது 25 மாவட்டத்திலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு விகாரையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்காட பணிகள் முன்டெடுக்கப்படுகின்றன.

புத்தசாசன அமைச்சின் ஊடாக இடம்பெறும் குறித்த திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நயினாதீவு நாகதீப விகாரையும் , மன்னாரில் முருங்கன் விகாரையும் , முல்லைத்தீவில் கொக்குளாய் விகாரையிலும் , வவுனியாவில் மடுக்கந்தை சிறிதலதா விகாரையிலும், கிளிநொச்சியில் கரடிப்போக்கு விகாரையிலும் இடம்பெறவுள்ளதாக அறுவிக்கப்பட்டுள்ளதோடு நாடு பூராகவும் இடம்பெறும் குறித்த சிறப்பு வழிபாட்டிற்காக அரசு 19 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ..