அதிபர் இடமாற்றத்தில் கிளிநொச்சியில் ஆளும் கட்சி அரசியல்வாதியின் தலையீடு!

4 d
4 d

கிளிநொச்சி மாவட்டத்தில் மெற்கொள்ளப்பட்ட அதிபர் இடமாற்றத்தில், ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவர் தலையிட்டு தடுத்து திறுத்தியுள்ளதனால் கற்றல் கற்பித்தல் பணிகள் முடங்கும் நிலமை ஏற்பட்டுள்றதாக சுட்டிக் காட்டப்படுகின்றது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள 12 கல்வி வலயத்திலும் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த இடமாற்றத்மின் கீழ், கிளிநொச்சியில் 17 அதிபர்களுக்கு அவர்களது இணக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டது.

ஏனைய 11 கல்வி வலயங்களிலும் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டது . ஆனால் குறித்த கிளிநொச்சி கல்வி வலயத்தில் மட்டும் உள்ளூர் அரசியல்வாதியின் தலையீட்டால் தடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இடமாற்றப்பட்ட அதிபர்க கூறும்போது குறித்த அரசியல்வாதியின் செல்வாக்குள்ள சர்ச்சைக்குரிய ஓர் அதிபர் தற்போது தரம் 3இல் உள்ளார். அவரை 1ஏ.பி பாடசாலைக்கு நியமிக்கும் நோக்கிலேயே இதனைத் தடுக்கின்றனர்.

குறித்த அதிபர் ஏற்கனவே அதே பாடசாலையில் இருந்து பல மோசடிகள் , தவறான நடத்தைகள் காரணமாக கட்டாய இடமாற்றத்திற்கு உட்பட்டவர் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.