நான் தான் முஸ்லிம் தீவிரவாதம் தொடர்பில் அதிகம் பேசினேன் – ஞானசார தேரர் பெருமிதம்

2 3oad
2 3oad

முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பாக என்னை விட அதிகமாக பேசிய ஒருவரை யாராலும் காண்பிக்க முடியுமா?

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை கைது செய்து, இரகசிய இடத்தில் வைக்க வேண்டும்.

அவர்கள் தொடர்ந்தும் வெளியில் சுதந்திரமாக இருப்பார்களாயின், அனைத்து ஆதாரங்களையும் அழித்து விடுவார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார்.

எவ்வாறான எதிர்ப்புக்கள் வந்தாலு எமது செயற்பாடுகளை நாம் தொடர்ச்சியாக மேற்கொள்வோம்.

முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பாக பல்வேறு தகவல்களை வழங்கிய எமக்கு எதிராக கடந்த காலங்களில் சட்டம் செயற்பட்டது.

ஆனால், தீவிரவாதத்திற்கு துணை செய்தவர்கள், கொலைகாரர்களுக்கு எதிராக எந்தவொரு செயற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை.

“தேரர்களாகிய நாங்கள் துரவறம் செல்லும்போது எங்களின் முடி மட்டும் தான் வெட்டப்படுமே ஒழிய, எங்களின் உரிமைகள் கிடையாது.

இன்று அனைத்து அரசியல் கட்சிகளும் தேரர்களின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நாம் அரசியலுக்கு வரவேண்டுமா, இல்லையா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.