கருணா கட்சியும் கோபாலகிருஸ்ணனின் கட்சியும் ஒரு சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

20
20

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மற்றும் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தலைமையிலான கிழக்குத் தமிழர் கூட்டமைப்புக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒரே பொதுச்சின்னத்தின் கீழ் எதிர்வருகின்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ளுல் தொடர்பில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் செயற்பாடுகளின் ஒரு கட்டமாக இச்சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.

இச்சந்திப்பின் போது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி சார்பில் அதன் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன், செயலாளர் வி.கமலதாஸ் மற்றும் மேலதிகச் செயலாளர் சே.ஜெயானந்தமூர்த்தி ஆகியோரும், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் த.கோபாலப்பிள்ளை, இணைப்பாளர் சீவரெத்தினம் உட்பட நிருவாக உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் சேர்ந்து களமிறங்குதல் தொடர்பில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதுடன், விட்டுக் கொடுப்புகள், ஏனைய கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் போன்ற விடயங்களும் இதன் போது பேசப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.